வேலூர் மாவட்டத்தின் நட்சத்திர தொகுதி காட்பாடி. இத்தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருப்பவர், தி.மு.க. பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன். 1971-ல் முதல்முறையாக காட்பாடி தொகுதியில் கலைஞரால் களமிறக்கப்பட்டார். காட்பாடி தொகுதியில் மட்டும் இதுவரை 10 முறை போட்டியிட்டு 8 முறை வெற்றிபெற்றுள்ளார். கடந்த 2021 தேர்தலில் துரைமுருகனுக்கு எதிராக அ.தி.மு.க. வேட்பாளர் ராமு நிறுத்தப்பட்டார். துரைமுருகன், தனக்கு களம் எளிதாக இருக்கும் என நினைத்த நிலையில் போட்டி கடுமையாக இருந்தது. கடைசி சுற்றில் தபால் வாக்குகள் துரைமுருகனைக் காப்பாற்றி 746 வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற வைத்தது.
இத்தொகுதியில் வன்னியர்கள், பட்டியல் சமூகத்தினர் சரிசமமாக உள்ளனர். அதற்கடுத்து முதலியார், நாயுடு சமுதாயத்தினர் உள்ளனர். வெற்றி தோல்வியை நிர்ணயிப்பது வன்னியர், பட்டியல் சமூகத்தினர் தான். அப்படியிருக்க, தனக்கு ஏன் இவ்வளவு பின்னடைவு என தனக்கு நம்பகமான நிர்வாகிகளை அழைத்துக் கேட்ட போது, கட்சியின் மிக முக்கிய நிர் வாகிகள் சிலரின் உள்ளடி வேலை களை அறிந்து கொண்டதோடு, மக்களிடம் தாம் இன்னும் நெருங்க வேண்டுமென முடிவு செய்தார்.
"தேர்தலின்போது வாக் குறுதிகளாக, சிப்காட் அமைக்க நிலம் தந்தவர்களில் சிலருக்கு வேலைவாய்ப்பு தரவில்லை, அதை உருவாக்கித் தருவேன். புதிய தொழிற்சாலைகளைக் கொண்டுவந்து வேலைவாய்ப்பை அதிகப்படுத்துவேன், வள்ளிமலை யில் அரசு கலைக்கல்லூரி கொண்டுவரப்படும், பொன்னை யில் அரசு மருத்துவமனை, விளையாட்டு மைதானம் அமைத்துத் தருவேன்' என வாக்குறுதிகள் தந்திருந்தார். இதில் 90% வாக்குறுதிகளை நிறை வேற்றிவிட்டார். அதேநேரத்தில் காட்பாடி தொகுதிக்குள் ராணிப் பேட்டை மாவட்டம் வாலாஜா ஒன்றியத்துக்கு உட்பட்ட லாலாப்பேட்டை, முகுந்தராய புரம், சீக்கராஜபுரம், ஏகாம்பர நல்லூர் உட்பட 10 ஊராட்சிகள் வருகின்றன. இந்த ஊராட்சி களைக் கண்டுகொள்ளவில்லை என அக்கிராம மக்கள் அதிருப்தியில் உள்ளனர். மாநகர பகுதிக்குட்பட்ட காங்கேயநல்லூ ரில் சாலை வசதிகள் சரியில்லை. தங்கள் பகுதி பிரச்சினைகள் அந் தப் பகுதி நிர்வாகிகள் வழியாக மட்டுமே துரைமுருகன் கவனத் துக்கு செல்லும்படி உள்ளன. அவரின் கவனத் துக்கு வரும் பிரச்சனைகள் உடனே நிவர்த்தி செய்யப்படுகின்றன. அதேபோல் பொதுமக்கள், தொகுதி எம்.எல்.ஏ.வை நேரடியாகச் சந்தித்து முறையிட வேண்டுமென்றால் அதற்கான வாய்ப்புகளே இல்லை. பல ஆண்டுகளாக சட்டமன்ற அலுவலகம் மூடியே கிடக்கிறது.
நேரம் கிடைக்கும்போதெல்லாம் தொகுதிக்கு வந்துவிடுகிறார். 87 வயதாகும் துரைமுருகனுக்கு உடல் ஒத்துழைக்கவில்லை. ஆனாலும் வரும் சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் காட்பாடி தொகுதியில் களமிறங்க வேண்டுமென முடிவுசெய்துள்ளார். 13-வது முறையாக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டால் அவர் கலைஞரின் சாதனையை முறியடித்துவிடுவார் என்பதால் அவருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் சீட் தரமாட்டார் எனச் சொல்லிவருகிறார்கள்.
இதுகுறித்து கட்சியின் சீனியர்களிடம் பேசியபோது, "கலைஞரின் சாதனையோடு துரைமுருகனுடையதை ஒப்பிடமுடியாது. காரணம், 13 முறை சட்டமன்றத் தேர்தலில் நின்று 13 முறையும் வெற்றிபெற்றவர் கலைஞர். அவருக்கு வேண்டாதவர்கள், கலைஞரின் சாதனையை முறியடித்துவிடுவார், அதனால் இவருக்கு தலைவர் சீட் தரமாட்டார் என கிளப்பிவிடுகிறார்கள். கட்சியின் பொதுச்செய லாளரான அவருக்கு சீட் இல்லையென்றால் எதிர்க்கட்சிகளுக்கு அவல் கிடைத்தது போலாகிவிடும். அதனால் நிச்சயம் அவர் இத்தேர்தலில் போட்டியிடுவார், அவரே வேண்டாம்'' எனச் சொன்னால்தான் உண்டு.
வயது மூப்பின் காரணமாக துரைமுருக னுக்கு அவர் போட்டியிடும் கடைசித் தேர்தலாக இது இருக்கும் என்பதால் அவரை பெரியளவில் வெற்றி பெற வைத்துவிடவேண்டும் என காட்பாடி தொகுதியை உள்ளடக்கிய வடக்கு மாவட்டச் செயலாளரும், துரைமுருகனின் மகனுமான எம்.பி கதிர்ஆனந்த் தீவிரமாக உள்ளார். பணத்தையும் தாராளமாக செலவு செய்யத் துவங்கியுள்ளனர், தள்ளாத வயதிலும் தொகுதியை ரவுண்ட் அடித்தபடியே உள்ளார்.
அ.தி.மு.க.வில் பலர் சீட் கேட்டாலும் கடந்த தேர்தலில் துரைமுருகனுக்கு கடும் போட்டியைத் தந்த அமைப்புச்செயலாளர் ராமுவையே மீண்டும் களமிறக்க முடிவு செய் துள்ளது அ.தி.மு.க. தலை மை. இத்தொகுதியிலுள்ள நாயுடு வாக்குகள் அப்ப டியே அவருக்கு விழும். கடந்த தேர்தலைப்போல துரைமுருகனைப் பிடிக் காத மாவட்டத்திலுள்ள தி.மு.க. பிரமுகர்கள் சிலர் வெற்றிக்கு மறைமுகமாக உதவுவார்கள், நிதியுதவி யும் தருவார்கள் என்கிறது அ.தி.மு.க. தரப்பு. இதே தொகுதியில் ஏற்கனவே இரண்டுமுறை நின்று தோல்வியைச் சந்தித்த மாநகரச் செயலாளர் அப்பு வும் வாய்ப்பு கேட்கிறார். இவர் தி.மு.க. மா.செ. நந்தகுமாருடன் நெருக்க மாக இருக்கிறார் என குற்றம்சாட்டுகின்றனர் எதிர்த்தரப்பினர். முன் னாள் அமைச்சரும், திருப் பத்தூர் மா.செ வீரமணி யை பகைத்துக்கொண்டு அவருக்கெதிராக செயல் படுவதால் அப்புவுக்கு சீட் தரக்கூடாது என முட்டுக்கட்டை போட்டு வருகிறார். அ.தி.மு.க.வில் கவுன்சிலராக, கூட்டுறவு சங்கத் தலைவராக இருந்தவரும், தொழிலதிபர் சேகர்ரெட்டியின் உறவுமுறை சகோதரரும், தெலுங்கு ரெட்டி சங்க மாநில துணைத்தலைவருமான ரிஷிகுமார் விருப்ப மனு தந்து சீட்பெற முயற்சித்துவருகிறார்.
அ.தி.மு.க. மா.செ.வாக வாசு இருந்தபோது, தேர்தல் நிதியில் கையாடல் செய்ததாக பதவி பிடுங்கப்பட்டு ஓரங்கட்டி வைக்கப்பட்டிருந் தவர், செங்கோட்டையன் மூலமாக த.வெ.க.வில் இணைந்துள்ளார். அவர் காட்பாடி தொகுதியை கேட்கவுள்ளார் என்கிறார்கள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2019-02/02 Raja.jpg)
/nakkheeran/media/media_files/2026/01/22/duraimurugan-2026-01-22-16-27-00.jpg)